Breaking
Wed. Jan 15th, 2025
இலங்கையர் என்ற ரீதியில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஆட்கொல்லி கொரோணா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அநுராதபுர மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.
கொவிட் – 19 வைரஸ் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
அரசாங்கத்தால் கொரோணா வைரஸை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் மாத்திரம் இந்த நோயை முற்றாக அழித்து விட முடியாது. நாட்டு மக்களும் இத‌ற்கான பங்களிப்பை வழங்க வேண்டும்.
இக்கொடூர நோயினை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள், பாதுகாப்புப் படையினர், அரச அதிகாரிகள் வழங்கியுள்ள அறிவுருத்தல்கள் மற்றும் கட்டளைகளைப் பின்பற்றி, வெளியிடங்களில் அதிகமாக நடமாடுவதை குறைத்து வீடுகளிலேயே இருப்பது சிறந்ததாகும்.
நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில், கொரோணா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், இந்த இக்கட்டான சூழலிலிருந்து எமது நாட்டைக் காப்பாற்ற ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என்றார்.

Related Post