Breaking
Thu. Jan 9th, 2025
-அஷ்ரப் சமத் –
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என முடிவெடுப்பது போல நாடகமாடி வரும்  முஸ்லிம் காங்கிரஸ்பொது வேட்பாளரை ஆதரிக்க அரசைவிட்டு வெளியே  வந்தாலும் ஒன்றுதான் வராவிட்டாலும் ஒன்று தான் “ஆவத் எக்கை நாவத் ஏக்கை” என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஹலால் விடயம் தொடக்கம் அளுத்கம பேருவளை கலவரம் இடம்பெற்ற போது கூட மஹிந்த அரசுக்கு வால் பிடித்துகொண்டு  அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று முழு நாடே பொது வேட்பாளர் மைத்ரியுடன் அணிதிரண்டுள்ள நிலையிலும் அக்கட்சியின் உயர்பீடத்தை கூட்டி நாடகம் எடுப்பது ஏன் என்பதை முஸ்லிம்கள் நான்கு விளங்கிவைத்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது தவிர சிங்களவர்கள் நாங்கள் முஸ்லிம்களுக்காக பாராளுமன்றத்தில் குரல்கொடுக்கும் போது முக்காடு போட்டுக்கொண்டு ஓடி ஒளிந்துகொண்டவர்கள் தான் இந்த முஸ்லிம் தலைமைகள் என்பதையும் முஸ்லிம்கள் நான்கு புரிந்து வைத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த வெற்றிபெற்றால் நாம் எங்கே செல்வது? மைத்ரி வெல்வார் என்பதற்க்கு என்ன உத்தரவாதம்? என கேட்கும் இவர்கள் ஆயிரக்கணக்கான உயிர்களை உடைமைகளை இழந்தும் இன்றும் கொள்கையுடன் வாழும் வடக்கு தமிழர்களை பார்த்தாவது படம்படிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரித்தாலும் யாருக்காக தேர்தல் பிரசாரம் செய்தாலும் முஸ்லிம்கள்   மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் ஒழித்துகட்ட முடிவெடுத்துவிட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
என்று முதலாவது பள்ளிவாயல் உடைக்கப்பட்டதோ ,என்று ஹலாளுக்கு எதிராக பிரச்சினை வந்ததோ ,என்று முஸ்லிம்கள் அணியும் உடைக்கு பிரச்சினை வந்ததோ அன்று இவர்கள் அரசை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் அன்று இவர்கள் மஹிந்த வீட்டில் விருந்து சாப்பிட்டிட்டு கொண்டிருந்தார்கள் ,அன்று இவர்கள் அரசை விட்டு வெளியேறி இருந்தால்  முஸ்லிம்கள் இவர்களை ஒருவேளை பராட்டியிருப்பார்கள் ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் சமூகத்துக்காக துணிந்து முடிவெடுக்க முடியாத இவர்கள் நாளையா தினமே அரசை விட்டு வெளியேறினால் கூட முஸ்லிம்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு விளங்க்கிகொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகளை  உடைக்கும் போது மவுனம் காத்த அரசாங்கம் இன்று முஸ்லிம் காங்கிரசை தக்கவைத்துக்கொள்ள என்ன வாக்குறுதியையும் வழங்க காத்திருக்கிருக்கிறது.அரசாங்கம் முஸ்லிம்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை ஒரு போதும் நிறைவேற்றாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும் இன்னும் இன்னும் அரசாங்கத்துடன் போலியாக பேரம் பேசிக்கொண்டிருப்பதை முஸ்லிம் காங்கிரஸ் நிறுத்திவிட்டு தங்கள் ஆசான்கலான ராஜபக்ஷ குடும்பத்துக்கு சேவை செய்வது சிறந்தது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Post