Breaking
Thu. Jan 16th, 2025

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற்கொண்டு, புல்மோட்டை பிரதேசத்தில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் குடும்பங்களுக்கு மற்றும்  ஊரடங்கினால் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் நேற்று (07) வழங்கி வைக்கப்பட்டது.

மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்றூப், கிண்ணியாவைச் சேர்ந்த அஷ்ஷேய்ஹு அஸீஸ் (நளீமி) அவர்கள் தனது நண்பர் ஜிப்ரி ஹாஜியாரிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகள் மூலம், கட்சியின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் வழிகாட்டலில், அரச படை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், இந்த நிவாரண உலர் உணவுப் பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, மக்கள் காங்கிரஸின் உள்ளூர் முக்கியஸ்தர்களான தௌபீக், சல்மான் பாரீஷ், நௌபல், றுவைஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Related Post