Breaking
Fri. Jan 10th, 2025

தெஹிவளைப் பிரதேசத்தல் உள்ள பள்ளிவாசல்கள் நிருவாகிகளுக்கும்  அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது . நேற்று இரவு தெஹிவளையில் நவாஸ் முஸ்தபா என்பவரின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

 

இந்த சந்திப்பில் தெஹிவளை கடவத்தை வீதி  பள்ளிவசால் சம்பந்தமான விடயங்களும் பேசப் பட்டது  இது தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் தெஹிவளை கடவத்தை வீதி  பள்ளிவசால் சம்பந்தமான வழக்க இன்று நடைபெறுகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுகையிருடன் பேசியுள்ளதாகவும் இவ் வழக்கில் சிங்கள சட்டத்தரணிகளை சேர்த்துக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளேன். எனவும் நீதிமன்றம் ஊடாகவே நமக்கு நிரந்தரமாக இப் பள்ளியை நடாத்துவதற்கு ஒரு தீர்ப்புகிடைக்கும்.

 

அதற்காக எல்லோரும் பிராத்திக்கும் படி அமைசச்ர் றிசாத் கேட்டுகொண்டார் இவ்வாறான விடயங்களை கையாழ்வதற்கு  தெஹிவளை கல்கிசைப் பிரதேசத்தில வாழும் முஸ்லிம்கள் எனக்கு ஆகக்குறைந்தது 2 பிரதிநிதிகளைப் பெற்றுத்தாருங்கள்.

 

கொழும்பில் எங்களுக்கு கதைப்பதற்கும், இப் பிரதேசத்தில் மாகாணசபையோ, பாராளுமன்றத்திலோ முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை. ஆகவே தான் தெஹிவளையில் எமது கட்சியில் 3 பிரதிநிதிகளை நிறுத்தியுள்ளோம். ஆகவே  3

 

பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு உதவுமாறு அமைச்சர் வேண்டிக்கொண்டதுடன் . உங்கள் பிரதேச பள்ளிவசால் சம்பந்தமாக பேசுவதறகு நாங்கள் சென்போது  தெஹிவளை மேயர் தனசிரி

 

றிசாத்பதியுத்தீன் ஏன் தெஹிவளைக்க வருகின்றீர். நீர் மன்னாரைப் பார்த்துக்கொள்ளும் என கூறினார். இப் பள்ளிவிடயமாக தெஹிவளை ஓ.ஜ.சியுடன் முரண்பட்டடுள்ளேன். கிராண்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைதொடர்பாக ஜ.சி.பியுடன் வாக்குவாதப்பட்ட விடயங்கள் பற்றியும் ஜனாதிபதியிடம் கூடச் சொல்லியிருக்கின்றார்கள். என தெரிவித்தார் .

 

இதேவேளை பிரதேசத்தின் ஓவ்வொரு பள்ளிவாசல் ஊடாக 100 பேர் வீதம் 500 பேரை  ஒன்று கூட்டி  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இஷாத்  தொழுகையின் பின்  தெஹிவளை சஹ்ரான் மண்டபத்தில் கூட்டமொன்றை நடாத்தவும்  அங்கு வருகைதந்த  பள்ளிவாசல் நிர்வாகிகளால் தீர்மாணிக்கப்பட்டது.

132

Related Post