Breaking
Wed. Jan 8th, 2025
கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹோகந்தரவில் விமானமொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.  அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விமான விபத்து காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
6.20 மணியளவில் ஹோகந்தர கத்தரீன் பார்க் பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விமானத்தில் நால்வர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தற்போது பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஹோகந்தர கத்தரின் பார்க் பகுதியில் விமான விபத்து காரணமாக பாரிய சுவாலைகளுடன் தீப்பற்றிக் கொண்டுள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
antovo_fligh_down_001 antovo_fligh_down_002 antovo_fligh_down_003

Related Post