Breaking
Wed. Jan 15th, 2025

பிரதம வேட்பாளர்களின் வியூகங்கள் கூட புத்தளம் தொகுதியில் கேள்விக்குறியாகியுள்ளன என்றும் தராசுக் கூட்டணி சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஒன்றுக்கான முயற்ச்சி இரட்டிப்பாக மாறலாம் எனவும் பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பொதுவான காரியாலயம் (09) புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான ஆப்தீன் எஹியா மேலும் கூறியதாவது,

“அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பால் பாதிக்கப்பட்ட புத்தளம் தொகுதி மக்களாகிய நாம், தொடர்ந்தேர்ச்சியாக எமக்கான பிரதிநிதித்துவத்தை இழந்து வந்தோம். தொடராக வந்த அரசாங்கங்கள் சீமெந்து தொழிற்சாலை, அனல் மின் நிலையம், அருவக்காலு குப்பை திட்டம் என, எமது தொகுதிக்கு பாதிப்பேற்படுத்தும் திட்டங்களை, எமது எதிர்ப்பினை தாண்டியும் சர்வாதிகாரமாக செயற்படுத்துவதிலேயே முனைப்புக்காட்டினார்கள்.

இவ்வாறு தொடராக வாக்களித்த நாம் ஏமாற்றங்களையே சந்தித்தோம். இதன் விளைவே எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க, கட்சிகளுக்கு அப்பால் எம்மை ஒன்றிணைத்து, தராசுக் கூட்டணி உருவாக காரணமானது. இதனை சிலர் தவறான கோணத்தில், இனவாதமாக பெரும்பான்மை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர்.

வெற்றி இலக்கினை நோக்கி பயணிக்கின்றபோது எமக்குள் ஏற்படுகின்ற போட்டி, சவால்கள் எமது ஒரு பிரதிநிதித்துவம் எனும் இலக்கை இரட்டிப்பாக்கலாம் என்ற ஆய்வுகளும் சமூகமட்டத்தில் எழுந்துள்ளன. எதிர்வரும் தேர்தல் முடிவுகள் யாரினதும் சுய வெற்றியாகாது. மாறாக அது ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சிவில் அமைப்புகளின் முயற்சியாகவும், சக வேற்பாளர்களின் தியாகத்தின் பங்காகவுமே நாம் கருதுகிறோம்.

மக்களை ‘வெறுமனே பிரதிநிதித்துவத்தை பெற்று விட்டோம்’ என்ற சந்தோசத்தை விட, ‘அந்த பிரதிநிதித்துவத்தினால் இழந்த உரிமைகளை வென்றெடுத்துவிட்டோம்’ என்ற மகிழ்ச்சியே உண்மையான சந்தோசமாகும். அதனை இந்த பிரதிநிதித்துவத்தின் மூலம் ஏற்படுத்துவோம்” என்றார்.

Related Post