Breaking
Sat. Jan 4th, 2025

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கூறிய நல்ல கருத்துக்கள் பலவற்றை திரிவு படுத்தி கற்சிதமாய் மக்களிடம் சேர்க்கும் பணியில் சிலர் அண்மைக் காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதன் பின்னணியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளதாகவும் அறிய முடிகிறது.அண்மையில் தாருஸ் சலாமில் நடந்த கட்சிக் கூட்டத்தின் போது தவம் அரசிற்கு சார்பாக குரல் கொடுத்ததாக ஒரு குறித்த ஊடகவியலாளர் அண்மையில் கூறி இருந்தார்.

“இது ஓர் திரிவு படுத்தப் பட்ட செய்தி” என  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் தனது மறுப்பறிக்கையினைக் கொடுத்திருந்தார்.இத் திரிவு படுத்தலின்  பின்னனனியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரே இருப்பதாகவும் மக்களிடையே வெளிப்படுத்தி இருந்தார்.தான் வெளியிட்ட செய்தி பொய்யாகினால் மக்களிடையே தனது நம்பகத் தன்மை கேள்விக் குறியாகிவிடும் என குறித்த ஊடகவியலாளர் தவத்தின்  மறுப்பரிக்கைக்கு ஓர் பதிலை வழங்கி இருந்தார்.அப் பதிலில் தவம் கட்சியினை காட்டிக் கொடுப்பதாக கூறி இருந்தார்.

இங்கே காட்டிக் கொடுத்தவர் யார்..? தவத்தின் மீது சேறு பூச தவம் கூறாதவைகளை கூறியதாக கூறிய அப் பாராளுமன்ற உறுப்பினரா..?அல்லது தவமா..? இச் சேறு பூசலிற்கு துணை போன குறித்த ஊடகவியாலரா?அல்லது தவமா..? ஊடகப் பிரபலத்திற்கான இவ்வாறானவற்றிற்கு துணை போய் கட்சியினுள் பிளவை உண்டு பண்ணும் இவ்வாறான காரியங்களை செய்ய விளையும் இவ் ஊடகவியலாளர்களை என்ன சொல்வது?

சரி,தவம் உண்மையில் கட்சிக் கூட்டத்தில் அவ்வாறு தன் பக்க வாதங்களை முன் வைத்திருந்தாலும் அதனை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? வெளிப்படுத்துவது நாகாரீகமா?.தன் மீது சேறு பூசியவர்கள் யார் எதற்காக என்பதனை வெளிப்படுத்தும் உரிமை.கடப்பாடு தவத்திற்கு இல்லையா..??

தவம் தனது பக்க நியாயத்தைக் கூறியதனையே காட்டிக் கொடுப்பு என்ற இவர் தன்னை  இவ்வாறான சேறு பூசலில் ஈடு பட வைத்தவரை சமூகத்திற்காக வெளிப்படுத்துவாரா? சமூகத்திற்கான தனது எழுத்துப் பயணத்தை இவர் செய்வாராக இருந்தால் இவ்வாறான புல்லுருவிகளை வெளிப்படுத்த வேண்டும்.கட்சியினுள் நடப்பவைகளை சுய நலத்திற்காக வெளியிடுவதும்  கணவன் மனைவிற்கிடையிலான அந்தரங்களை படம் பிடித்து வெளியிடுவதற்குமிடையில் பாரிய வேறு பாடு இல்லை.

இதன் பின்னணியில் இருப்பதாக யூகிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சில காலங்கள் முன்பு இன்னுமொரு மாகாண சபை உறுப்பினர் மீதும் இவ்வாறான நடவடிக்களில் ஈடு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை நான் வெளியிட்ட போது குறித்த ஊடகவியலா எமக்கு அளித்த பதில்

///////////Siddeque Kariyapper :மிகவும் நல்ல கருத்துகளை ஆழமாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். ஆனால், எனக்கு கவலை என்னவென்றால் எனது பெயரை நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டும். ஏனெனில் நான் எனது பெயர் வரவேண்டுமென்பதில் பேராசை கொண்டவன்.

”ஊடகப் பிரபலத்திற்கான இவ்வாறானவற்றிற்கு துணை போய் கட்சியினுள் பிளவை உண்டு இவ்வாறான காரியங்களை செய்ய விளையும் இவ் ஊடகவியலாளர்களை என்ன
சொல்வது?” என்று நன்றாக எனக்கு உறைக்குமாறு கூறியுள்ளீர்கள்.

ஆனால் உங்களைப் போன்ற சிரேஷ்ட, மூத்த எழுத்தாளர்கள் என்னைப் போன்ற பிஞ்சில் பழுத்தவர்களுக்க ஆலோசனை கூறுலாம்தானே?////////////////////////////

நான் இப்பதிலுக்கு கூற விரும்புவது:1+2 எப்படி யார் கூட்டினாலும் மூன்று தான் அது சிரேஷ்ட என்றாலும் சரி கனிஷ்ட எண்டாலும் சரி.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

Related Post