Breaking
Mon. Dec 23rd, 2024
புத்தளம், புளிச்சாங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் விவாகப் பதிவாளர் கமால்தீன் அவர்களின் புதல்வர் சகோதரர் முஹம்மட் சமீமின் அகால மரணமும், அவரின் ஜனாஸா எரிப்பு சம்பவமும் எனக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்தது.
 
‘அஸ்-ஸபா’ அறக்கட்டளையை உருவாக்கி, அதன் ஊடாக மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து வந்த அவர், எனது தீவிர ஆதரவாளரும் கூட. நான் அவரின் பிரதேசங்களுக்கு செல்லும் போதெல்லாம் என்னிடம் வந்து, மக்களின் தேவைகள் பற்றியே கூறும் ஒரு சமூகப்பற்றாளர்.
 
புத்தளம் மாவட்டம், 30 வருடகாலமாக இழந்திருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயற்பட்டு, எமது முயற்சிகளுக்கு பக்கபலமாக நின்று உழைத்தவர்.
 
கடந்த காலங்களில், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மீள்குடியேற்ற செயற்பாட்டுக்காக மிக அர்ப்பணிப்புடன் செயலாற்றியவராவார்.
 
சகோதரர் சமீமின் ஜனாஸா எரிக்கப்பட்டமையானது மிகவும் வேதனை தரக்கூடியதாகவுள்ளது. இந்த அரசியின் ஜனாஸா எரிப்பு அராஜகம் தொடர்ந்துகொண்டிருப்பது பெரும் வேதனையாகவுள்ளது. இவ்வாறன அராஜக செயற்பாட்டுக்கு எதிராக நாம் மிக அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றோம். அல்லாஹ்விடம் பாரம் சாட்டுகிறோம்.
 
அல்லாஹ் அவருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை நசீபாக்குவானாக!
 
அவரது இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மனவலிமையை வழங்க வேண்டுமென இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்!
 
ரிஷாட் பதியுதீன்
தலைவர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

Related Post