Breaking
Mon. Dec 23rd, 2024

கட்சித் தவிசாளர் அமீர் அலியின் தியாகங்கள் மற்றும் விசுவாசத்தை மலினப்படுத்தி, வதந்திகளை வெளியிடுவோர், தமது முயற்சிகளில் வெற்றியடையப் போவதில்லையென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

“தவிசாளர் அமீர் அலி கட்சியின் ஸ்தபாகர்களில் ஒருவர். கட்சிக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம தலைமையுடன் இணைந்து பல்வேறு தியாகங்களை செய்தவர்.

அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாதிருந்த போது, அதன் அயல் மாவட்டத்தை சேர்ந்த தவிசாளரிடம் அந்த மாவட்டத்தை கண்காணிக்குமாறு தலைமை கோரிய போது, அதனைப் பொறுப்பெடுத்து, ஒரு பாராளுமன்ற பிரதிநிதி இல்லாத குறையை ஈடு செய்யும் அளவுக்கு, அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக பொறுப்புணர்வுடன் பெரும் பங்காற்றியவர். இதனை கட்சி நன்றியுணர்வோடு பார்க்கின்றது.

மாவட்டங்கள் தோறும் கட்சியைக் கட்டமைப்பதில், தவிசாளர் அமீர் அலியின் முயற்சிகள் பெரும் பங்களித்தன.

இவ்வாறான ஒருவரின் கட்சிப் பணிகளை மலினப்படுத்தி,  வதந்திகளை வெளியிடுவோர், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர்.

உண்மையான கட்சித் தொண்டர்களும் ஆதரவாளர்களும் கட்சிக்குள் பிரச்சனைகளை ஏற்படுத்தும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளமாட்டார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Post