Breaking
Sun. Dec 29th, 2024

வாழைச்சேனை நிருபர்

கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையினால் உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் செவ்வாய்கிழமை (16) காலை அறுவடை செய்யப்பட்டது.

பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் காசிப்பிள்ளை சித்திரவேல் வாகரை பிரதேச சபையின் செயலாளர் சிவலிங்கம் இந்திரகுமார், பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் இணைந்து அறுவடையை ஆரம்பித்து வைத்தனர்.

திணைக்களங்களுக்கிடையிலான உற்பத்தி திறன் போட்டியை முன்னிட்டு வாகரை பிரதேச சபையின் வளாகத்தினுள் மரக்கறித் தோட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இம்முறை வெங்காயம் அதிகூடிய விளைச்சலைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Post