Breaking
Sat. Dec 28th, 2024

மின்சாரசபைக்கு மனிதவள நிறுவனங்கள் ஊடாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களில் தகுதியானவர்களுக்கு அடுத்த வாரம் நிரந்தர நியமனம் வழங்கப்படவிருப்பதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அடுத்தவாரம் வெள்ளிக்கிழமையளவில் இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட விருப்பதாகவும், மனிதவள நிறுவனங்களின் ஊடாக இணைத்துக்கொள்ளப்பட்ட எவருக்கும் அநீதி இழைக்காத வகையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பிலுள்ள அமைச்சு அலு வலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரி விக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டமைக்கு அமைய மனிதவள நிறுவனங்களின் ஊடாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு இலங்கை மின்சார சபையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிர்வாக ரீதியாகக் காணப்பட்ட சில நடைமுறைப் பிரச்சி னைகள் தீர்க்கப்பட்டு சுமார் 4000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் எம்.எம்.சி.பேர்டினான்டோ, மனிதவள நிறுவனங்களின் ஊடாக உள் வாங்கப்பட்டவர்களில் தகுதி உடையவர்க ளுக்கு நிரந்தர நியமனம் வழங்கவுள்ளோம். அதற்காக தகுதி அற்றவர்களை வேலையி லிருந்து நீக்க வில்லை. அவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கி அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளின் மூலம் வேலை வாய்ப்பு வழங்குவோம். எவருக்கும் அநீதி இழைக்கப்படாது.

இதுவரை மனிதவள நிறுவனங்களின் ஊடாகப் பணியாற்றியவர்களை உங்வாங் கும்போது ஏற்கனவே மின்சாரசபையில் பணியாற்றுபவர்கள், மனிதவள நிறு வனங்களில் பணியாற்றிய பொருத்தமில் லாதவர்களை உங்வாங்குவதாகப் பிரச்சினை எழுப்பினர்.

இந்தப் பிரச்சினை தற்பொழுது தீர்க்கப்பட்டுள்ளது. இதற்கமைய தகுதிவாய்ந்தவர்களை பிராந்திய ரீதியில் அடையாளம் கண்டு அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவுள்ளோம். இது தொடர்பில் பிராந்திய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வெள்ளிக்கிழமையளவில் இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும். தகுதியற்றவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கி அவர்களுக்கு மாற்று வழிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மின்சாரசபையின் தலைவர் டபிள்யூ.பீ.கனேகலவும் கலந்து கொண்டிருந்தார்.

-Thinakaran-

Related Post