இக்பால் அலி
பொது பலசேன என்ற அமைப்பினால் முஸ்லிம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு எடுத்துக் கூறியும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. நீங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களியுங்கள். உங்களுடைய சகல தேவைகளையும் நிறைவேற்றித் தருவேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.
பறகஹதெனியவிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் ஆதரவாளர்களை 19-12-2014 முன்னாள் சந்திரிக்கா பண்டாரநாயக சந்தித்து உரையாடியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்களுக்கு பயனுள்ள கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. நீங்கள் எப்போழுதும் ஆதரவாளர்கள்தான். இங்குள்ள பாடசாலை பிரச்சினை முதல் அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொள்வோம். பொதுவேட்பாளர் மைத்திரி பாலவை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.