எம்.எஸ்.எம். நிஸார்
மட்டக்களப்பிலிருந்து ஆரையம்பதி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பட்டை இழந்தது விபத்துக்குள்ளானது.
நேற்று பி.ப 4.15 மணியளவில் நாவற்குடா கல்முனை பிரதான வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இவர் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் காப்புறுதி நிறுவனமொன்றில் பணிபுரிபவரென்றும் அறியக்கிடைத்தது.