Breaking
Thu. Jan 2nd, 2025

காலநிலை மாற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 28ஆவது மாநாடு (COP28) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது.

இதில் இலங்கை நாட்டு இளைஞர்களின் பிரதிநிதியாக முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் முன்னாள் பேருவளை பிரதேச சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார் கலந்துகொள்கிறார்.

மேலும், இந்த மாநாட்டில் பல்வேறுபட்ட நாடுகளின் இளைஞர் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள், சுற்றாடற்றுறை அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.

இந்த மாநாட்டில் உலகளவில் பாரிய சவாலாக இருக்கின்ற காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post