ஏன் ஜக்கிய தேசிய கட்சிக்கு நானும் அல்லது நவீன் திசாநாயக்க உட்பட மற்றவர்களும் வந்தார்கள் என்பது பலருக்கும் புரியாமல் உள்ளது.அதற்கு காரணம் இந்த நாட்டில் நடக்கும் அநீதிகளை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.நாங்கள் நினைத்திருந்தால் அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு அங்கிருந்திருக்கலாம். ஆனால் மக்களை பற்றி சிந்தித்ததன் காரணமாகவே அரசாங்கத்தைவிட்டு வெளியில் வந்தோம் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ. இராஜதுரை தெரிவித்துள்ளார். நுவரெலியா மாநகர சபையின் புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற பொது வேட்பாளரை ஆதரிக்கும் ஜக்கிய தேசிய கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-Thinakural-