இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படவும் ஜனநாயகம் வளரவும் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் பாதுகாப்பு, சுய கௌரவம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இன்று (2014-12-23) இடம் பெறும் தபால் மூல வாக்களிப்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்கிளித்து அவரது வெற்றியை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Nதிசயத் தலைவர் ரிசாத் ;பதியுதீன் அரச ஊழியர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது –
இந்த நாட்டில் புரையோடிப்போயிருந்த இனப் பிரச்சினை மற்றும் கொடிய யுத்தம் என்பனவற்றால் எமது மக்கள் சொல்லென துன்ப.துயரங்களையும், இழப்புக்களையும் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் இந்நாட்டில் சமாதானம் ஏற்படவேண்டும் என்பதற்காக கடந்த 2005ம் ஆண்டு முதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கி வந்தது.
இந்த நாட்டு மக்கள் சமமான உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்பதில் ஆழமான நோக்கினை கொண்டு செயற்பட்டு வந்த எமது கட்சி எவ்வித நிபந்தனைகளையும் முன்வைத்ததில்லை.
ஆனால் இந்த சமாதான சூழலை சீர்குலைப்பதற்கு கடந்த சில வருடங்களாக கடும்போக்கு சிங்கள அமைப்புக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் நானும் எனது தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் ஜனாதிபதியின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்தும் இதனை தடுப்பதற்கு அவர் போதுமான நடவடிக்கை எடுக்காமை முஸ்லிம்கள்; மத்தியில் கடும் அதிருப்தியினை தோற்றுவித்திருந்துத. இதனால் முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி மீது கொண்டிருந்த நம்பிக்கை இழக்க நேரிட்டது.
ஓன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்களை இலக்கு வைத்து தொடரப்பட்ட தாக்குதலால் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் சுய மரியாதையினையும் தமது கலாச்சார அடையாளங்களையும் இழக்கும் துரதிஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டது. இவற்றை கவனத்திற் கொண்டு இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுகத்தினதும் எமது செயற்பாடுகளை அங்கீகரி;க்கும் தமிழ் சமுகமும் நன்மை பெறும் வகையில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுக்க நேரிட்டது.
இந்த வகையில் இன்று இடம் பெறும் தபால் மூல வாக்களிப்பில் அரச அதிகாரிகளாகிய நீங்கள் ஒன்றுபட்டு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிசாத் பதியுதின் கேட்டுள்ளார்.