Breaking
Thu. Dec 26th, 2024

1. மன்னார் மாவட்டத்தின் ஜனாதிபதியின் தேர்தல் வேலைகளுக்காக அமைச்சர் றிசாத்பதியுத்தீன் நியமிக்க பட்டு இருந்தார். அவர் எதிரணிக்குச் சென்றதால், மன்னாரில் ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பனிகளை கண்காணிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவை ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் குழு நியமித்துள்ளது.

2. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இன்று பி.பகல் தமிழ் பத்திரிகைகளில் விசேட பேட்டி ஒன்றை வழங்கினார். அதில் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் எதிர்தரப்பு சென்றமை பற்றியும் அதனைக் கண்டித்தும் வடக்கு முஸ்லீம்களை றிசாத் காட்டிக்கொடுத்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார். நாளைய தமிழ் பத்திரிகைகளில் இச் செய்திகளை எதிர்பாருங்கள்.

2. தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவில் இருந்து நாளை வருவதற்கு முன், தமிழ்த்தேசிய முன்னணி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரன் இன்று மைத்திரிபால மற்றும் முக்கிய உறுப்பினர்களுடன் சந்தித்துள்ளனர்.

ஏற்கனவே மாவை சேனாதிராஜா சகல மவாட்டங்களுக்கும் சென்று சகல ரீ.என்.ஏ மக்கள் பிரநிதிநிகளை சந்தித்துள்ளார்.

இம்முறை சகல தமிழ் மக்களும் தமது வாக்குகளையும் அளிக்க வேண்டும், யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி இந்தியாவில் உள்ள மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற இரா.சம்பந்தன் திரும்பியதும் நாளை அல்லது நாளை மறுதினம் அறிவிப்பதாக நேற்று வவுணியாவில் சொல்லியிருக்கின்றார்.

Related Post