Breaking
Thu. Dec 26th, 2024

கொழும்பிலிருந்து, ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

மத்திய கொழும்பில் 145,000 வாக்குகள் இருந்தது. ஆனால் இப்போது 130,000 வாக்குகளே பதியப்பட்டுள்ளது. 15000 வாக்குகளுக்கு என்ன நடந்தது? என்பதே தெரியாத ஒரு நாடகமாகவே இருக்கின்றது.

இவ்வாறு மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி, மைத்திரிபாலா சிறிசேனவின் வெற்றியை மத்திய கொழும்பில் உறுதிப்படுத்தும் முகமாக கிரான்பாஸ் மெல்வத்த மாவத்தை வீட்டுத் தொகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்த்திப்புடனான பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இக்கூட்டத்துக்கு விக்ரமபாகு கருனாரத்ன மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்புக்கான மற்றுமொரு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் உட்பட தொடர்மாடிகளில் வசிக்கின்ற அனைத்து மக்களும் பிரசன்னமாயிருந்தனர்

Related Post