Breaking
Thu. Dec 26th, 2024

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறினோவை ஆதரித்து முஸ்லிம்கள் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லேக் ஹவுஸுக்கு முன்னால் டி.ஆர். விஜயவர்த்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி கேட்போர் கூடத்தில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

25ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதனை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தலைமையிலான தேசிய ஐக்கிய அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இக்கூட்டத்தில் கொழும்பிலுள்ள முஸ்லிம்களும், நாட்டின் ஏனைய பகுதி முஸ்லிம்களும் பங்குகொள்ள முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேனா உரையாற்ற உள்ளதுடன், கரு ஜயசூரியவின் உரையும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இக்கூட்டத்தில் ஐ.தே.க. செயலாளர் கபீர் காஸிம், சந்திரிகா பண்டாரநாயக்க, ராஜித சேனாரத்ன, பைரூஸ் ஹாஜி, முஜிபுர் ரஹ்மான், அஸாத் சாலி உள்ளிட்ட எதிரணியில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

(இச்செய்தியை பேஸ்புக்கில் பகிர்ந்து முஸ்லிம் சகோதரர்களுக்கு தெரியப்படுத்துமாறு வேண்டப்படுகின்றது.)

Related Post