Breaking
Thu. Dec 26th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீனின் வாகனத்தை சில மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இன்று அவருடைய இல்லத்திற்கு வருகை தந்த ஊடகவியாளர்களிடம் இவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தாவது

‘தனது குடும்பத்தினர் நேற்று அரசின் பிரத்தியேக இல்லத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது சில மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் எனது குடும்பத்தினர் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்து சென்றதை அவதானிக்க முடிந்தது.

அதே போன்று எனது வாகனம் செல்லும் இடங்களுக்கெல்லாம் எனது வாகனத்திற்கு பின்னல் வேறு சில வாகனங்கள் பின் தொடர்கின்றன.

எனது பிரத்தியேக பாதுகாப்புக்கு 45 பேர் வழங்கப்பட்டிருந்தனர். நான் நேற்று பொதுவேட்பாளருடன் இணைந்தவுடன் எனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மீழளித்து விட்டேன். தற்போது எனது பாதுகாப்புக்காக 02 பொலிஸ் உத்தியோகத்தர் கடமை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நான் செல்லும் இடங்களுக்கு என் வாகனத்தை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் வருகின்றார்கள்.

இது எனது பாதுகாப்புக்கு பெரும் அச்சறுத்தலாக உள்ளது என ரிசாத் பதியுதீன் இன்று தன்னை நேர்காணலுக்காக வந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தாக’  ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related Post