இன்னும் சில தினங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா மற்றும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து நாடு பூராகவும் பிரச்சார பணிக்ளை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
23 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்ளிப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் வாக்களார்கள் பலர் எனக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியிருந்தனர். அவர்கள் மைத்திரிபால சிறிசேனவுகுத்தான் வாக்களித்துள்னர்.
இந்நிலையில் எதிர்வரும் தினங்களில் மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கும் முழு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன். இதன்பொருட்டு நாடு பூராகவும் மைத்திரி, மற்றும் ரணில் ஆகியோருடன் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளேன் என்றார்.