சிரியாவில் உள்ள கோலன் ஹெய்ட்ஸ் பகுதியை கடந்த 1967–ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இது சிரியாவின் கியூனேத்ரா மாகாணத்தில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று இப்பகுதியில் சிரியா எல்லையில் இஸ்ரேலின் ஆளில்லாமல் இயங்கும் விமானம் பறந்தது. அதை கண்காணித்த சிரியா ராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது.
இது ஸ்கைலார்க்–1 மாடல் விமானமாகும். இது கோலன் கெய்ட்ஸ் பகுதியில் ஹாடர் கிராமத்தில் சுடப்பட்டதாக சிரியா ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.