எம்.ஏ. அமீனுல்லா
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுத்தீனின் நடவடிக்கையால் இந்நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதாக சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுத்தீனுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் சகல முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அமோக வெற்றியில் பங்காளர்களாக வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட சகல மக்களும் ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களேயாவார்.
இருந்தும், றிஷாத் பதியுத்தீன் எம்.பியின் நடவடிக்கை இந்நாட்டின் முழு முஸ்லிம் சமூகத்திற்குமே அபகீர்த்தியாக அமைந்துவிட்டது.
எல்லா முஸ்லிம்களும் ஜனாதிபதிக்கே ஆதரவு நல்க வேண்டும். றிஷாத் எம்.பிக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் சகல முஸ்லிம்களும் ஜனாதிபதிக்கு முழுமையாக ஆதரவு நல்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.