Breaking
Wed. Dec 25th, 2024

நபீஸா எம். மபாஸ் – கல்முனை

சம்மாந்துறையில் வித்தாகி
கல்முனையில் வேரூன்றி
முஸ்லிம்களின் விருட்சமாகி
முழு நாட்டிற்கும் நிழல் பரப்ப
விருந்திருந்த விருட்சம் அன்று
விதையாகி விட்டதுவோ?

முஸ்லிம்களின் குரல் ஓங்க
முழங்கிய அவர் குரலோசை
முழு உலகும் தெரிவிக்க
ஏதிரொலித்த இடியோசை
இறுதிப்படியை ஏறும் முன்னே
இழந்து விட்ட சோகம் என்ன

வட-கிழக்கின் விடி-விளக்கு
வபாத்தான செய்தி அன்று
அத்துத் காக்கா வந்து சொல்ல
வதந்தியாகாதா? என நினைத்தும்
வானொலியும் பறைசாற்ற
வெடித்துவிட்ட இதயங்கள்
துடிப்பதையும் மறந்து விட்டது

ஸ்தம்பித்த நெஞ்சங்களும்
கண்ணீர் விட வேண்டாம் என
‘நான் என்னும் நீ’ இதழில்
கட்டளை இட்டுச் சென்ற
கலங்கரை விளக்கமல்லோ

‘அஷ்ரப்’ என்னும் பெயரில்
தனக்கு நிகர் தானே என
தலைமைத்துவம் தந்த விருட்சம்
விதையாகிப் போனாலும்
முளைவிடாதோ என நினைத்து
காத்துக் கிடந்திருந்தோம்

‘றிஸாட்’ என்னும் பெயரில்
முளை தள்ளும் காட்சி கண்டு
பிரம்மித்து நின்றபோதும்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட
‘மகிந்த சிந்தனை’ யால்
மொட்டயடிக்கப்படப் பட்டுவிட்டது

இன்ஷா அல்லாஹ்
‘மைத்திரி’ எனும் மழைத் துளியில்
தளிர் விட்டு கிளை தழைத்து
நிழல் பரப்பும் விருட்சமாக
எல்லாம் வல்ல இறையோனை
இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கின்றோம்.

Related Post