இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்
ற்போது மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையிலான அதிகாரிகள் நேற்றும்,இன்றும் சென்று பார்வையிட்டுள்ளதுடன்,அம்மக்களினால் வேண்டப்பட்ட பொருட்கள் பலவற்றயும் அவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனின் பணிப்பின் பேரில் மாகாண சபை உறுப்பினர் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் சஹாப்தீன்.இளைஞர் சேவை மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர் எம்.முனவ்வர் ஆகியோர் இங்கு விஜயம் செய்தனர்.
மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதையடுத்து இப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அச்சான் குளம்,ராசமடு,மோட்டைக்கடை மற்றும் நொச்சிக்குளம்(அறுவைக்குண்டு)கிராம மக்கள் மோட்டைக்கடை பாடசாலையிலும்,எருவட்டான் சமூக நிலையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன்,மடுக்கரை,பள்ளங்கோட்டை,முள்ளி மோட்டை கிராம மக்கள் நானாட்டான் பாடசலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை சென்று பார்வையிட்ட வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பாதியுதீன் இம்மக்களது தேவைகள் குறித்தும் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.அவசரமாக சிறு பிள்ளைகளுக்கான பால் மா இல்லாமை தொடர்பில் இம்மக்கள் மாகாண சபை உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து 1முதல் 5 வயது வரைக்குட்பட்ட பிள்ளைகளுக்கான பால்மாவினை கொள்வனவு செய்து வழங்குமாறு மாகாண சபை உறுப்பினரின் செயலாளரிடத்தில் அவர் பணிப்புரை வழங்கினார்.அதனை அவைகள் இன்று உரிய மக்களுக்கு வழங்கப்பட்டது.
அதே வேளை மடு பிரதேச செயலகப் பரிவிற்குட்பட்ட தம்பனைக்குள கிராமம் வெள்ளத்தால் மூழ்கியைதையடுத்து இம் மக்கள் பண்டிவிரிச்சான் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மாகாண சபை உறுப்பினர் மற்றும் முன்னால் அமைச்சரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான றிசாத் பதியுதீனின் மடு பிரதேசத்திற்கான இணைப்பாளர் செல்லத்தம்பு ஆகியோர் இம்மக்களை பார்வையிட்டதுடன்,இவர்களுக்கு இதுவரைக்கும் வழங்கப்படாத அத்தியவசிய தேவைகளை பெற்றுக் கொடுக்குமாறு பிரதேச செயலாளர் மற்றும் கிராம அதிகாரி ஆகியோரை மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கேட்டுக் கொண்டார்.
தற்போது கால நிலையில் சற்று தளர்வு காணப்பட்ட போதும்,இடம் பெயர்வுக்குள்ளான மக்கள் தமது வீடுகளுக்கு இன்னும் சில தினங்களுக்க அப்பாலே திரும்ப முடியும் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.