பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையைத் பல இடங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை,மண்சரிவில் சிக்கி 20 இற்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளனர். இறந்தவர்களில் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
பதுளைப் பகுதியின் கில்பொல – மெதகமை என்ற இடத்தில் நேற்றுக் காலை 6 மணியளவில் பாரிய வெடிச் சத்தத்துடன் சுமார் ஐந்து ஏக்கர் விஸ்தீரண முள்ள பிரதேசம் மண் சரிவுக்குள்ளாகியுள்ளது. ஏழு வீடுகள் இம் மண்சரிவில் புதையுண்டதுடன் அவ்வீடுகளிலிருந்த பதினொரு பேரும் புதையுண்டுள்ளனர்.
இதையடுத்து, மீட்பு பணியாளர்கள் மேற்கொண்ட தேடுதலில், இருவரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. ஒருவர் முழு சடலமாகவும் மற்றைய சடலத்தின் தலை மற்றும் உடற் பாகமாகவும் மீட்கப்பட்டதில் அடங்கும். தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை பதுளைப் பகுதியின் கல்கந்த என்ற இடத்தில் வீடொன்றின் மீது நேற்று அதிகாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் நித்திரையிலிருந்த தாயும், மகளும் பலியாகினர். மற்றும் பதுளைப் பகுதியின் ஹேகொட என்ற இடத்தில் வீடொன்றின் மீது மண் சரிவு ஏற்பட்டதால் ஒருவர் பலியானார்.
பதுளைப் பகுதியில் உடுவரை என்ற இடத்தில் எற்பட்ட அனர்த்தத்தினால் பதினைந்து குடும்பங்கள். அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் தோட்டப் பகு திகள் பலவற்றில் நில வெடிப்புகளும். மண் சரிவுகளும் இடம்பெற்றமையினால் முப்பத்திரண்டு தொழிலாளர் குடும்பங்கள், லயக் குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.
பதுளை – பசறைப் பிரதான பாதையில் பாரிய மரமொன்று வேருடன் சாய்ந் திருப்பதால் வாகனப் போக்குவரத்துக் களுக்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்து இரு தினங்களாக பெய்துவரும் அடை மழையினால் பதுளைப் பகுதியின் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் அனர்த்தங்களினால் மக்கள் பெரும் பயத்துடனும் பீதியுடனும் காணப்படுகின்றனர்.
பெய்துவரும் கடும் மழையினையடுத்து பதுளை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே மண் மற்றும் கற்பாறை சரிவுகள் இடம்பெற்றுள்ளன.
கோணமுட்டாவை பெருந்தோட்டத்தில் இடம்பெற்றுள்ள மண் சரிவு மற்றும் நில வெடிப்பினால் 15 தொழிலாளர் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பண்டாரவளை – பூனாகலை பாதையில் பெரும் மண்சரிவு இடம்பெற்றிருப்பதால் அப்பிரதான பாதை மூடப்பட்டுள்ளது.
மேலும் பெரகலை, வெலிமடை, ஊவா பரனகமை, அலுகொல்லை, பசறை, ஆலி-எல, பதுளை ஆகிய இடங்களிலும் மண் சரிவுகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை மண்சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளனர் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.