ஆளும் தரப்பினர் முக்கியஸ்தர்கள் சிங்கபூருக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, சிங்கபூருக்கு பயணமாகியுள்ளார்.
இதேவேளை, பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று (26) பகல் 12.45க்கு சிங்கபூருக்கு பயணமாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர், சிங்கபூரிலிருந்து நாட்டுக்கு திரும்பியதன் பின்னர் முக்கியமான தீர்மானம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதற்கிடையில், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பியான சஜின் வாஸ் குணவர்தன நேற்று காலை 9.50க்கு சிங்கபூருக்கு பயணமாகியுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
-Tamilmirror-