சவுதி அரேபியாவில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சவுதி அரேபிய “அராப் நியூஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவிற்கும் குவேற் ஆகிய எல்லைப் பிரதேசமான கார்பியில் வட கிழக்கே உள்ள நகரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
35 வயதான இந்த பணிப்பெண், நீண்ட நேரமாக அவரது அறையில் இருந்து வெளியே வர தவறியதனை அடுத்து தொழில் வழங்குனர், அவரது அறை கதவினை உடைத்த போது குறித்த இலங்கை பணிப் பெண் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இலங்கை தூதுவராலயம் இவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பிலான விசாணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.