K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)
வன்னி மக்களின் முதுபெரும் முதுசம் றிசாத் பதியுதீன் அவர்களாவர். அவர் இம்மக்களுக்குச் செய்துள்ள சேவைகள் அளவிட முடியாதவை ‘சர்வதேச ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வலிமையானவர் பட்டியலில் அவரும் ஒருவர்’.இவரும்,இவரின் அரசியல் வழிகாட்டலும் வன்னி முஸ்லிம்களுக்கு போதும்.
வெளியில் இருந்து வந்த யாரும் அரசியல் புகட்டத்தேவையில்லை.வன்னி முஸ்லிம் அரசியல் வரலாற்றில் ஆரம்பத்தில் ஒருவர் மட்டும் தெரிவு செய்யப்படுவது வழக்கம் , பின்னர் அத்தொகை இரண்டாக மாறியது.அதன் பிற்பாடு அத்தொகை மூன்றாக அதிகரித்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு இரு பிரதிநிதிகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு பிரதிநிதியும் , இதனைப் பொறுக்க முடியாத சில தீய சக்திகள் , ‘வன்னி முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்குவதற்கு இருமுனைகளில் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளன.
ஒரு முனை டீ.வீ.நிகழ்ச்சியைக் காட்டி மலையக மக்களை மயக்கிய எம்.பி. ஆனவரும் , பி.எம்.ஜி.ஜி றகுமானாரும். இணைந்து இவ்வீனச்செயலில் ஈடுபடுகின்றனர்.இவ்விடயத்தில் வன்னி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். வரலாற்றில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதனாவான்.