Breaking
Tue. Dec 24th, 2024

எஸ்.அஸ்ரப்கான்

சிறுபான்மை இனத்தை பெரும்பான்மைகள் திரும்பிப்பார்க்கின்ற இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். இந்நிலையில் எமது ஒட்டுமொத்த இருப்பையும் பாதுகாக்கின்ற திடகாத்திரமான முடிவை எமது மக்கள் எடுக்க வேண்டும். என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

கடந்த (25) கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எமது மக்களின் பிரச்சினைகள் பற்றி குறிப்பிடும்போது கடும் தொனியில் நடந்துகொண்டார். இதனால் இனவாத பிரச்சினைகள் என்று வருகின்றபோது மஹிந்தவை நம்ப முடியாது. ஆனால் றணில் விக்ரம சிங்ஹ, சந்திரிகாவை அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் நம்பலாம். அவர்கள் இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு.

என்றாலும் இரு அணிகளும் ஆபத்தானவையே. ஆட்சியாளரின் பக்கம் உடனடி ஆபத்து இருக்கின்றது. இதனை தடுத்தாக வேண்டும். கடந்த 2 வருடங்கள் இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்கள் எண்ணிலடங்காது. அதனை இல்லாமலாக்க வேண்டும். மக்களின் அபிலாசைகளை, தற்போதைய அரசியல் விருப்பங்களை நாம் அறிந்து அதற்கு மதிப்பளிக்க வேண்டும். என்ற பல நியாயமான காரணங்களுக்காகவே நாம் பொது எதிரணியில் இணைந்துள்ளோம். இப்போது எமது தலைவர் றிஸாட் பதியுதீன் மற்றும் கட்சி அரசியல் வாதிகளுக்கு பெரும் ஆபத்து ஆட்சியாளர்களால் இருக்கின்றது. இதனை நாம் முறியடித்து பாதுகாப்பை பெற்றுக்கொள்வது முஸ்லிம்கள் தமிழ் பேசும் சமூகங்களின் கைகளில்தான் இருக்கின்றது. இறைவனுக்கு அடுத்தபடியாக மக்கள்தான் தற்போது எங்கள் பாதுகாவலர்கள்.

எதிர்வரும் காலங்களில் என்ன முடிவாக இருந்தாலும் எமது கட்சி மக்கள் மன்றுக்கு வந்தே தீர்மானங்களை எடுக்கும்.

எதிர்வரும் காலங்களில் மஹிந்த ஆட்சிக்க வந்தால் 7 வருடங்கள் ஆட்சியில் இருக்கும் நிலையில் முஸ்லிம்களின் நிலை அதோ கதிதான். அவர் வெல்வதற்கான வாய்ப்பு மிக மிக அரிதாகும். இந்நிலையில் நிறைவேற்று அதிகாரமற்ற ஒரு ஜனாதிபதியாக பொது எதிரணி வேட்பாளர் வரலாம். அப்போது றணில் விக்ரம சிங்ஹ மிகவும் அதகாம் மிக்கவராக வர அதிகம் வாய்ப்புள்ளது. விடயம் இவ்வாறிருக்க றணில், சந்திரிகா, மைத்திரியிடமிருந்து போதுமான பாதுகாப்பை நாம் உறுதிசெய்யும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.

போதிலும் எம் சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பு, சுயகௌரவம், கலாச்சார விழுமியங்களின் பாதுகாப்பு, எமதுபள்ளிவாசல்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில்கொண்டும், எமக்கு ஆணை வழங்கிய மக்களின்கருத்துக்களையும், உணர்வுகளையும் உள்வாங்கி எடுத்தமுடிவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர்மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதாகும்.

நடைபெறவிருக்கும் இத்தேர்தல் கல்முனைக்கோ,அக்கரைப்பற்றுக்கோ, சம்மாந்துறைக்கோ, காத்தான்குடிக்கோபாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் தேர்தல்அல்ல. எனவே கட்சிபேதங்களை மறந்து முஸ்லிம்கள் அனைவரும் எதிர்கால ஆபத்திலிருந்து பாதுகாப்புப் பெற மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Related Post