ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் நாடு முழுவதும் சூடு பிடித்திருக்கும் நிலையில், நாளை மறுதினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை பொது எதிரணி விடுத்துள்ளது.
இதன்படி 30ம் திகதி பொது எதிரணியினரின் வடமாகாணத்தில் 3வது பிரச்சாரக் கூட்டம் மன்னார் மாவட்டத்தில் காலை நடைபெறவுள்ளது. தொடர்ந்து மதியம் வவுனியா மாவட்டத்திலும், பிற்பகல் யாழ்.மாவட்டத்திலும் நடைபெறவுள்ளது.
மேலும் பொது எதிரணியினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யாத நிலையில், குறித்த மாவட்டங்களில் வரவேற்பு நிகழ்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது எதிரணி விடுத்துள்ள அறிவித்தலில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி எதிர்வரும் 2ம் திகதி வடமாகாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.