எஸ்.அஸ்ரப்கான்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் அழைப்பை ஏற்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் ஆகியோர் கல்முனைக்கு நாளை திங்கட்கிழமை (29) காலை 8 மணிக்கு வருகை தரவுள்ளதாக வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
அவரது விஜயத்தின்போது, கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெறும் மக்கள் சந்திப்பிலும் துஆ பிரார்த்தனையிலும் கலந்துகொள்ளும் மைத்திரிபால சிறிசேன கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அனைத்து பிரதேச வாசிகளும் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மத்திய குழு வேண்டுகோள் விடுக்கின்றது.