Breaking
Mon. Dec 23rd, 2024

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட நட்டான்கண்டல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய நிர்மாணப்பணிகளுக்கென ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் தயாநந்தன் தெரிவித்தார். குறித்த ஆலயநிர்மாணத்திற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் வைபவரீதியாக இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.

 

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

குறித்த பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் என்னிடம் விடுத்தவேண்டுகோளுக்கிணங்க வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வணிக துறைஅமைச்சருமான றிசாத் பதியுதீன், மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.

 

இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து ஒரு இலட்சத்து ஐம்பதுஆயிரம் ரூபாவினை பெற்றுக்கொடுத்துள்ளனர். அத்துடன் குறித்த ஆலயத்தின் நிர்மாணப்பணிகளுக்காகநாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தனது பன்முகப்படுத்தப்பட்ட பாதீடு நிதியிலிருந்து ஒரு இலட்சம்ரூபாவை ஒதுக்கித் தருவதாகவும் தம்மிடம் தெரிவித்துள்ளதாக எதிர் கட்சி தலைவர் தயானந்தன், தனது நன்றியை தெரிவிப்பதாகும் அவர் தெரிவித்தார்.

Related Post