Breaking
Tue. Dec 24th, 2024
தனது கணவரை கொலை செய்ய வேண்டாம் என முல்லேரியா -கொட்டிகாவத்த பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காரச்சியின் மனைவி நிவங்கா சோலங்காரச்சி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தான் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாகவும் தயவு செய்து எனது கணவரை கொலை செய்ய வேண்டாம் எனவும் நிவங்கா சோலங்காரச்சி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சோலங்காரச்சி, பிரதேச சபையின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.

கொலன்னா பிரதேசத்தில் டிபென்டர் ரக வாகனங்கள் சஞ்சரிப்பதாகவும், தம்மை பின்தொடர்வதாகவும் சோலங்காராச்சி அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக ஏற்கனவே சோலங்காராச்சி முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்படி எதுவும் நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு என அவர் தெரிவித்திருந்தார். கொட்டிகாவத்த – முல்லேரியா பகுதியில் இனந்தெரியாத நபர்கள், வௌ்ளை வேன்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும் 2010 இப்படியான சூழ்நிலையிலேயே பாரத லக்ஷமன் கொலை செய்யப்பட்டதாகவும் நிவங்கா சோலங்காரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

solangarachi-wife-626x380

Related Post