கிழக்கு கரையோரத்தை அண்மித்த வளிமண்டலத்தில் நிலவிய தாழமுக்கம் வடக்கு நோக்கி இலங்கைத் தீவைவிட்டு நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் எதிர்வரும் சில நாட்களில் காலநிலை சீரடையும் என்றும் மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் அவ்வப்போது மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தோட ஆரம்பித்துள்ளது. எனினும் நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டமையால் தொடர்ந்தும் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதேவேளை நாட்டில் பெய்த தொடர் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 13 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.