இலவசமாக கிடைக்கும் வாகனங்கள் வெளிநாட்டு பயணங்களை ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் மட்டுமே அனுபவிக்கின்றனர்.
மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து நாட்டை பிழையான பதையில் வழிநடத்துகின்றனர்.
அதிவேக நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற அபிவிருத்தித் திட்டங்களில் பாரியளவில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.
மக்கள் அடகு வைத்த தங்க ஆபரணங்களை மீட்க முடியாது அவை ஏலத்தில் விடப்படுகின்றன.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் ஆகியன இன்று மிருகக் காட்சி சாலையாக மாற்றமடைந்துள்ளது.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்த மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென சரத் பொன்சேகா கோரியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அர் இதனைத் தெரிவித்துள்ளார்.