ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து உயர்கல்விப் பிரதியமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்கவும் விலகி, பொது எதிரணியில் இணைந்து கொண்டுள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மேலும் வலுப்படுத்தி 3வது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் எனும் திருத்தத்தை முன்மொழிந்த 18வது அரசியல் திருத்தத்திற்கு தான் ஆதரவளித்தமை தொடர்பில் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது எதிரணியில் இணைந்து கொண்டுள்ளதன் மூலம், மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு பங்களிப்பேன் என்று நந்திமித்ர எக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.