தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் யுத்தவெற்றியை சிந்திக்கும் படங்கள் காண்பிக்கப்படுவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
யுத்தவெற்றியை சிந்திக்கும் படங்கள் கொழும்பின் பல பகுதிகளில் அதிநவீன திரைகளில் காண்பிக்கப்பட்டுகிறது. இந்த நடவடிக்கையினை ஜனாதிபதி மகிந்த ராஜக்சவின் பரப்புரை பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன டிஜிட்டல் திரைகளை இந்த படங்களை காண்பிப்பதற்காக பயன்படுத்துகின்றனர்.
அந்த விசேட டிஜிட்டல் திரை ஒவ்வொன்றும் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியானவை. அதில் யுத்த வெற்றியை குறிக்கும் படங்கள் மீண்டும் மீண்டும் காண்பிக்கப்படுகின்றன. இதை பொலிஸார் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.
இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.