Breaking
Mon. Dec 23rd, 2024

பொது எதிரணியினர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை தேடுதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநாட்டு மண்டபத்தில் வாக்குச் சீட்டுக்கள் காணப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மண்டபத்தில் நான்கு அறைகள் பூட்டிய நிலையில் காணப்படுவதால் அதனை உடனடியாக திறக்குமாறு பொது எதிரணியினர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க, அத்துரலிய ரத்ன தேரர், ராஜித சேனாரத்ன, உள்ளிட்டோர் இதில் ஈடுபட்டனர்.

Related Post