புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்ட மக்களில் சுமார் 20,000 பேர் இன்றைய தேர்தலில் வாக்களிப்புக்குச் செல்வது புத்தளம் அரசியல்வாதியொருவரால் தடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மக்களை அங்கிருந்து மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக தேர்தல் ஆணையாளர் 20 பேரூந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்ததோடு முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தரப்பு 200 பேரூந்துகளை ஏற்பாடு செய்திருந்ததாகவும் எனினும், புத்தளம் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் அங்குள்ள சாரதிகளை அச்சுறுத்தி அவர்களின் பிரயாணத்தை தடுத்து வருவதாகவும் சட்டத்தரணி ருஸ்டி ஹபீப் தகவல்கள் தெரிவித்திரருந்தார்.
இந்நிலையில் இது குறித்து தற்போது புத்தளம் சென்று மாற்றீடுகளுக்காக முயற்சி செய்து வரும்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீனை தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்தவை