கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரால் மேற்கொள்ளப்படும் ,ஆசிரியர் கணக்கெடுப்பு தொடர்பான விண்ணப்பப்படிவத்தால் ஆசிரியர்கள் அனைவரும் கிராம சேகவரின் அலுவலகத்திலும் ,பிரதேச செயலகத்திலும் ,மருத்துவ அதிகாரியின் அலுவலகத்திலும் கூடி நிற்பதையும் காணமுடிகிறது.குறிப்பாக பெண்ணாசிரியைகள் பாரிய சிக்கல்களையும் ,கஸ்டங்களையும் எதிர்கொள்கின்றனர்.
மேலும் இவ்விண்ணப்பப்படிவத்துடன் இணைக்குமாறு கோரப்பட்டுள்ள 14 விடயங்களும் சிக்கல் நிறைந்தவையாக உள்ளன. குறிப்பாக கிராம சேகவரிடம் பெற வேண்டிய வதிவிடச்சானிறிதழ் ,2013ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதி என்பன. தேவையற்றவை ,கோரப்பட்ட ஏனைய விபரங்கள் யாவும் ஏலவே உரிய ஆசிரியர்களால் வழங்கப்பட்டு வலயக்கல்வி அலுவலகத்தில் உள்ள சுயவிபரக்கோவையில் உள்ளன.
இவ்விண்ணப்பப்படிவத்திற்கு எதிரான எதிர்ப்பலைகள் ,அம்பாறை ,மட்டக்களப்பு ,திருகோணமலை போன்ற பகுதிகளில் எழுந்துள்ளதையும் ,ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பு அறிக்கையையும் அவதானிக்க முடிகிறது.இப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைப் பெற்றுத்தருமாறு பிரதேச ஆசிரியர்கள் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.