Breaking
Fri. Nov 1st, 2024

இலங்கையின் புதிய அரசு மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க புதிய அரசுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது எனவே அதைத் தவறவிடாது செயற்படுமாறு சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தியத் தலைமை நிர்வாகி அனந்தபத்மநாதன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 18ம் திருத்தச் சட்டம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு பரந்த அதிகாரத்தை அளிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன திரும்பப் பெறப்பட வேண்டும்.

அத்துடன் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாப்பாளர்கள் மீதான அடக்கு முறைகள், சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான விசாரணைகளுக்கு புதிய அரசு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post