Breaking
Sat. Nov 2nd, 2024

தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவார். அத்துடன் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வார். ஜனாதிபதியுடன் பொது எதிரணியின் கட்சித்தலைவர்களும் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, பிற்பகல் 2 மணிக்கு தலதா மளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து கார் பவனியாக அத்தனகலவுக்கு ஜனாதிபதி புறப்படுவார். அங்கு, பண்டாரநாயக்கவின் நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி செலுத்துவார்.

தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு தலதா மாளிகையைச் சென்றடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post