அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற 48 வெளிநாட்டு தூதுவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் நியமனம் பெற்ற இந்த தூதுவர்கள் டயஸ்போரா அமைப்புக்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அரசியல் நியமனம் பெற்றவர்கள் டயஸ்போரா செயற்பாட்டாளர்களை இனங்காண முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அமைச்சர்களின் புதல்வர்கள் அல்லது புதல்விகளும் உள்ளடங்குகிறார்கள்.
இதனால் இவர்கள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கையில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது.