பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய எண்ணியுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் செயற்பாட்டில் இன்று பொதுபல சேனா செய்து வருகின்றது. வடமாகாண மக்கள் தொடர்பில் ஒன்றுமோ தெரியாத பொதுபல சேனா நான் முஸ்லிம் மக்களுக்கு வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது.
அவ்வாறான பொய்யான பரப்புரையின் மூலம் மீண்டும் இன முறுகலை ஏற்படுத்த அவர்கள் முனைகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.dc