Breaking
Wed. Dec 4th, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக ஜே.வி.பி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடுவதைத் தடுப்பதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜே.வி.பியினர் கோரிக்கை விடுத்தனர்.

ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், சுனில் ஹந்துந்நெத்தி உள்ளிட்ட ஜே.வி.பியின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் தமது முறைப்பாடுகளைக் கையளித் திருந்தது. முறைப்பாடுகளைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விஜித ஹேரத் மேலும் குறிப்பிடுகையில்,

அரச சொத்துக்களை மோசடி செய்தவர்கள் குறித்து நாம் முறைப்பாடு செய்துள்ளோம். அவர்களுக்கு எதிரான விசாரணைகளைத் துரிதமாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்திருப்பதுடன், மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்குமாறும் கேட்டுள்ளோம். இதுவரை காலமும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சரியான முறையில் செயற்படவில்லை. புதிய சூழ்நிலையில் முறையாகச் செயற்படும் என நாம் நம்புகின்றோம்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்து ஒரு மணித்தியாலத்துக்குள் தடுக்க புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். அவ்வாறானவர்களின் கடவுச்சீட்டுக்களை தடுத்துவைக்க முடியும்.

பசில் ராஜபக்ஷ நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். அதுமட்டுமன்றி மேலும் பல முன்னாள் அமைச்சர்களின் மனைவிமார் மற்றும் பிள்ளைகள் நாட்டைவிட்டுத் தப்பியோடி வரு கின்றனர்.

இவ்வாறானவர்களைத் தடுக்க வேண்டும். உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து வெளிநாடுக்குத் தப்பிச் செல்பவர்களைத் தடுக்குமாறு நாம் கோரிக்கை விடுத்துள் ளோம். கடந்த ஆட்சியில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சரியான தண்டனை கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

முதற் கட்டமாக இலஞ்ச மோசடியில் ஈடுபடுபட்ட 12 பேருக்கு எதிராகவே நாம் முறைப்பாடு செய்துள் ளோம். எதிர்வரும் காலங்களில் ஏனைய வர்களுக்கு எதிராகவும் முறைப்பாடுகள் செய்யப்படும். இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்கள் மக்களிடம் இருந்தால் எமக்கு வழங்க முடியும். அவற்றையும் நாம் ஆணைக் குழுவிடம் சமர்ப்பிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, ரோஹித்த அபேகுண வர்த்தன, சுற்றுலாத்துறை அதிகார சபையின் முன்னாள் தலைவர் சேனக்க குணரட்ன, சுற்றுலாத்துறை அதிகார சபையின் முக்கியஸ்தர் ரூமி ஜெளபர், கால்ட்டன் சுப்பர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், தேசிய லொத்தர் சபையின் தலைவர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஆகிய 12 பேருக்கு எதிராகவே ஜே.வி.பி.யினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

நாமல் ராஜபக்ஷ, மித்தெனிய, அக்குரணை, வீரகெட்டிய, மொரவக்க உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய நீர்ப்பாசனத் திட்டமொன்றை 1574.52 கோடி ரூபா செலவில் முன்னெடுக்கக் கூடியதை பவான் என்ற கம்பனியொன் றுடன் இணைந்து 3640.41 கோடி ரூபா பெறுமதியிட்டுள்ளதாக இந்த முறைப் பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா அதிகாரசபையின் பணத்தில் கிழக்கு மற்றும் தென்மாகாண சபையின் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் ஜே.வி.பியினர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட் டுள்ளனர்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியில் 50 இலட்சம் ரூபா செலவில் ஐ.ம.சு.மு ஜனாதிபதி வேட்பாளரின் உருவப்படம் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் அச்சிடப்பட்டிருப் பதாகவும் ஜே.வி.பி.யின் முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post