வடமாகாணசபையின் எதிர்க்கட்சத் தலைவர் பதவியினையும் ஈபிடிபி இழக்கிறதா? தற்போது ஈ.பி.டி.பியைச் சேர்ந்த தவராஜாவே அப்பதவியை வகிக்கிறார்.
ஏற்கனவே இந்த பதவி வகித்த கமல் கொலைக் குற்றச்சாட்டில் சிறை சென்றதால் பதவியிழந்ததை தொடர்ந்து, தவராஜா இந்தப்பதவிக்கு தேர்வானார். இப்பொழுது, ஈ.பி.டி.பி கட்சியிடமிருந்தே எதிர்க்கட்சி தலைமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது எதிர்க்கட்சி தரப்பில் ஈ.பி.டி.பியில் இருவரும், சுதந்திரக்கட்சி தரப்பில் போட்டியிட்ட சிங்கள உறுப்பினர்கள் இருவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மூவரும் உள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பதவியை குறிவைத்துள்ளது. அதற்கு ஆதரவளிக்க, சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தமக்கு ஆதரவளிக்கும் 5 உறுப்பினர்களின் சத்தியக்கடதாசிகளுடன் எதிர்வரும் 16ம் திகதி தவிசாளரை சந்தித்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரப் போவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.