ஏ.எச்.எம்.பூமுதீன்
-நியாயமான தீர்வுக்கு தமிழ் தலைமைகளை அழைக்கிறேன்.
-100 நாட்களுக்குள் கைத்தொழில் புரட்சி – அமைச்சர் ரிசாத் பதியுதீன்
கிழக்கு மக்கள் எந்த முதலமைச்சரை விரும்புகின்றார்களோ அவருக்கு நாம் ஆதரவளிப்போம். யார் முதலமைச்சர் என்பதை கட்சித் தலைவர்கள் கூடி 20 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய நாளிதழ்களின் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடும் போதே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஊடகவியாலாளர்களுக்கும் அமைச்சருக்குமான சந்திப்பு பின்வருமாறு
கேள்வி தேர்தலில் சிறுபான்மை மக்கள் மற்றும் சிறுபான்மைத் தலைவர்களின் பங்கு குறித்து உங்களது கருத்து என்ன?
பதில் – யுத்த காலத்திலும், அதற்கு முன்னரும் சிறுபான்மை அரசியல் தலைமைகளிடம் ஒவ்வொருவகையான உறவுகள் இருந்தன். ஆனால், இந்தத் தேர்தலில் இந்துக்ளும், கத்தோலிக்கர்களும், இஸ்லாமியர்களும், மலையகத் தமிழர்களும் தலைமைத்துவ மாற்றத்துக்காக ஒருமித்த கருத்துடன் ஒன்று சேர்ந்து செயற்பட்டனர். இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்ம். சிறுபான்மை சமூகம் விரும்பிய ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சிறுபான்மை மக்கள் தமது ஒற்றுமையைச் சாதித்துக் காட்டியுள்ளனர்.
‘
30 வருட காலமாக தமிழ் இளைஞர்கள் ஆயுதரீதியாகப் போராடி அடைய வேண்டியதை அடையவில்லை. அதேபோல் முஸ்லிம்களும் தனியாக கட்சியமைத்து செயற்பட்டனர். ஆனால், எதிர்பார்த்த விடயங்கள் எதுவுமே நாம் எதிர்பார்த்ததைப் போன்று கிடைக்கவில்லை. ஆனால், நாட்டின் தலைமையைத் தீர்மானிக்கும் விடயத்தில் அண்ணன் சம்பந்தனாக இருக்கலாம், ரவ+ப் ஹக்கீமாக இருக்கலாம், நாங்களாக இருக்கலாம், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் கிழக்கிலுள்ள தலைமைத்துவங்களாக இருக்கலாம். நாம் அனைவரும் இந்தத் தேர்தலில் எமது ஒற்றுமையைக் காட்டியுள்ளோம்.
இந்த ஆரம்பத்தை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நான் விரும்புகின்ன். ஏனெனில் இலங்கை சுதந்தரம் அடைந்ததன் பின்னர் தமிழ், முஸ்லிம் உறவுகளைப் பிறிக்க இதுபோன்ற விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆயுத ரீதியான அமைப்புகள் வந்தததன் பின்னர் அது இன்னும் வலுப்பெற்றது. தற்போது இந்தத் தேர்தலின் பின்னர் நல்ல சகுணம் பிறந்துள்ளது. இதைப் பாதுகாக்க அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல மதத் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன்னார், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், குருநாகல், திருகோணமலை ஆயர்களைச் சந்தித்து கலந்துரையாடினேன். இது நல்ல விடயம் என்று அவர்கள் கூறினர். அத்துடன், அண்ணன் சம்பந்தன், சுமந்திரன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோருடன் பேசினேன். இது நல்ல விடயம் என்று அவர்கள் கூறினர்.
எங்களுக்கிடையில் இருக்கின்ற சின்னச்சின்னப் பிரச்சினைகளை நாம் முதலில் பேசித் தீர்ப்போம். வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இருக்கின்ற பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம். அதன்பின்னர் பெரும்பான்மை சமூகத்துடன் பேசி, ஒன்றிணைந்த நாட்டுக்குள் நியாயபூர்வமாக ஒரு நல்ல தீர்வைப் பெறுவோம். 30 வருடம் போராட்டம் இடம்பெற்றது. தீர்வு வழங்கப்படவில்லை. ஆளுக்கு ஒன்ன்று கேட்கின்றோம். றனர். பெரும்பான்மை சமூகத்திலுள்ள அரசியல்வாதிகளுள் ஒருவர் கொடுக்க வேண்டும். என்கின் ஒருவர் கொடுக்க வேண்டாம் என்கின்றனர். எனவே, எங்களுக்கிடையிலான பிரச்சினைகளை முதலில் பேசித் தீர்த்துவிட்டு, பின்னர் பெரும்பான்மையினருடன் பேசுவோம். தற்போது ஏற்பட்டுள்ள ஒற்றுமையைக் கட்டிக்காத்து, தமிழ்பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வைப் பெறவேண்டும் என்ற தூரநோக்குடன் நான் எல்லா தமிழ் தலைமைகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.
கேள்வி இந்தத் தேர்தல் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில் -ஜனாதிபதித் தேர்தலில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வாறானதொரு முடிவை எடுக்கும் என அப்போது ஆட்சியிலிருந்த அரசு எதிர்பார்க்கவில்லை. நாம் முடிவெடுத்தபோது, பல அச்சுறுத்தல்கள், பல கஷ்டங்கள், மரண அச்சுறுத்தல்கூட விடுக்கப்பட்டது. அப்படியிருந்தும், சிறுபான்மை சமூகத்தின் உணர்வுகளையும், சிறுபான்மை சமூகத்துக்க நடந்த அநியாயங்களையும், பொது பல சேனா போன்ற அமைப்புக்களைக் கட்டுப்படுத்தாதனால் இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் வாழ்வதற்கே அஞ்சவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. அரசிலிருந்து இதைக் கட்டுப்படுத்த முயற்சித்தோம். ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அளுத்கம சம்பவம் தொடர்பில் பொது பல சேனாவின் பொதுச் செயலாருக்கு எதிராக 100 இற்கும் மேற்பட்ட முப்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அவரை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தவில்லை. அதற்கு மேலிடம் அனுமதியளிக்கவில்லை. இவ்வாறான நிலையில், மீண்டும் இந்த அரசைக் கொண்டுவந்து சிறுபான்மை சமூகம் அச்சத்துடன் வாழும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என்று நாம் எடுத்த முடிவு வெற்றியளித்துள்ளது. அதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றேம்.
எமது முடிவு குறித்து பலர் விமர்சன் செய்தனர். 9 ஆம் திகதி நாம் தோற்றுவிடுவோம் என்று கட்சியிலிருந்து சிலர் விலகிச் சென்றவர்கள் கூறினர். ஆனால், நாம் எவரையும் குகூறவில்லை. எமது கட்சி முன்னோக்கி செல்லும். 90 வீதத்திற்கும் அதிகமானோர் கட்சியுடன் இணைந்திருந்தனர். இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவர்கள் தொடர்பில் கட்சியின் கூட்டத்தில் முடிவெடுப்போம். எமது கோரிக்கையை ஏற்று வடக்கு, கிழக்கு மட்டுமன்றி ஏனைய பகுதிகளிலும் வாக்களித்த, உதவியளித்த அனைவருக்கும் நன்றியைக் கூறிக்கொள்கின்றேன்.
கேள்வி வட மாகாணத்தில் இடம்பெறும் மீள்க்குடியேற்ற பிரச்சினையை எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?
பதில் – வட மாகாண முதலமைச்சர், புதிய மீள்க்குடியேறங்ற அமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து வட மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் யார்? குடியேறியுள்ள முஸ்லிம்கள் யார் என்பதைப் பார்க்க வேண்டும். வட மாகாணத்தைச் சேராத தமிழரையோ, முஸ்லிமையோ, சிங்களவரையோ குடியேற்ற மாட்டோம்.
வேறு மாவட்டங்களிலிருந்த பெரும்பான்மையினரைக் கொண்டுவந்து அண்மைக் காலங்களில் குடியேற்றங்கள் இடம்பெற்றது. எனவே, இது விடயம் தொடர்பில் வட மாகாண சபை, மீள்க்குடியேற்ற அமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டப்புடன் இணைந்து திட்டமிட்ட மீள்க்குடியேற்றத்தைச் செய்யவும், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் ஆராய உள்ளோம்.
கேள்வி 100 நாள் திட்டத்தை எவ்வாறு செயற்படுத்தவுள்ளீர்கள்?
பதில் -மைத்திரி ஆட்சி என்ற தலைப்பின்கீழ் 100 நாட்களுக்குள் நாம் என்ன செய்யப்போகின்ம் என்பதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறி அவர்களது ஆணையைப் பெற்றுள்ளோம். அதில் எனது அமைச்சுடன் தொடர்புடைய விடயங்களை நூறு வீதம் நடைமுப்படுத்துவோம். நாட்டின் கைத்தொழில்து மேம்படுத்தல், முதலீடுகளை அதிகரித்தல், ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்ச் செய்வோம். அத்துடன், நாடலாவிய ரீதியில் 10 மாவட்டங்களைத் தெரிவுசெய்து சிறு கைத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். எவ்வளவு வேகமாக எமது செயற்பாட்டை முன்னெடுக்க முடியுமோ அவ்வளவு வேகமாந நாம் செயற்படுவோம்.
வியாபார சமூகத்துடன் பேச்சுக்களை நடத்தி வருகின்ம். வெளிநாட்டு வியாபார சமூகத்துடனும் பேசி வருகின்ம். ஏற்றுமதியாளர்கள், கைத்தொழிலாளர்கள் ஆகியோருடன் பேசிவருகின்ம். இந்த வேலைத்திட்டங்கள் மிகவும் திட்டமிட்ட முயில் இடம்பெறும். 100 நாட்களுக்கு ஒரு கைத்தொழில் புரட்சியைக் காட்டுவோம்.
கேள்வி 100 நாட்களின் பின்னர் இடம்பெறும் தேர்தலில் எவ்வாறு செயற்படவுள்ளீர்கள்?
பதில் -எமது கட்சி நாடலாவிய ரீதியில் அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசிவருகின்ம். ஹக்கீம் மற்றும் அஸாத் ஸாலி ஆகியோரின் சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து பேசி ஒரு உடன்பாட்டுடன் நாடுமுழுவதிலும் போட்டியிட எதிர்பார்க்கின்ம். அந்தக் கட்சிகள் ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லையாயின் பெரும்பான்மைக் கட்சிகளுடன் பேசுவோம். அந்த பெரும்பான்மைக் கட்சிகளுடனும் உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்துப் போட்டியிடவும் நாம் தயாராக உள்ளோம்.
கேள்வி – உங்களது அலுவலகத்தில் பொது பல சேனா நுழைந்த விவகாரம் தொடர்பில் முப்பாடு செய்துள்ளீர்கள். இதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பதில் – பொது பல சேனா ஊடகவியலாளர் சந்திப்பொன் நடத்தி மீண்டும் சில சில கதைகளைக் கூறியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசின் வீழ்ச்சிக்கு பொது பல சேனாதான் காரணம். பொது பல சேனாவைக் கட்டுப்படுத்துமாறு நான் ஆரம்பத்திலேயே கூறினேன். அது ஒரு சாபக்கேடு என்றும் கூறினேன். இறுதியில் 12 வருடங்கள் ஆட்சியில் இருக்க வேண்டியவர் மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
இது ஒரு சதிகார கூட்டம். தாம் நினைத்தாற்போல நாடகமாக பொதுபல சேனாவுக்கு இனி இடமளிக்கப்படமாட்டாது. அந்தந்த மதத்தின் உரிமைகளைப் பேணி, அந்தந்த மதத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிக்க மாட்டோம் என இந்த அரசு கூறியுள்ளது. இதைக் கூறித்தான் நாம் மக்களிடம் வாக்கு பெற்றுள்ளோம். எனவே, சட்டத்தை எவர் கையில் எடுத்தால் நிச்சயமாக நாம் நடவடிக்கை எடுப்போம். மத குருவாக இருந்தாலும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி மன்னார் நீதிமன்ற விவகாரம் தொடர்பில் நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
பதில் – மன்னார் நீதிமன்றத்துக்கு கல்லெறிந்ததாகவும், வில்பத்து காட்டை அழித்ததாகவும் என்மீது இரு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த இரு விடயங்களுக்கும் எனக்கு தொடர்பில்லை. மன்னார் நீதிமன்றத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது நான் கொழும்பில் இருந்தேன். மாலை 4 மணிக்குத்தான் நான் அங்கு சென்ன். இந்நிலையில், என்மீது அபாண்டமாக ஒரு ஊடகம் திட்டமிட்ட முயில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது. எனவே, இது தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என்பதை நான் ஆராய்ந்து வருகின்றேன்.
கேள்வி வில்பத்து சரணாலயப் பகுதிகளில் நீங்கள் காணியைக் கைப்பற்றியுள்ளீர்கள் என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது சுமத்தப்படுகின்றதே?
பதில் – வில்பத்தில் ஒரு அங்குலமேனும் நாம் கைப்பற்றவில்லை. அது மரிச்சுக்கட்டி மக்களின் சொந்தபூமி. 25 வருடங்களாக அவர்கள் அங்கிருந்து சென்றதால் அந்த இடம் காடாக இருந்தது. வில்பத்து சரணாலயத்துக்குள் சிறு துண்டு நிலத்தைக்கூட யாரும் சுத்தம் செய்யவும் இல்லை. குடியேறவுமில்லை. குடியேறவேண்டிய தேவையும் இல்லை. இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் நான் நிராகரிக்கின்ன். ஊடகங்களில் இது போன்ற விடயங்கள் இனிமேலும் கூறப்படுமாயின், சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சிந்தித்து வருகின்றேன்.
கேள்வி கிழக்கு மாகாண சபை ஆட்சி விடயத்தில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
பதில் – கிழக்கு மாகாண சபை தொடர்பில் ரவூப் ஹக்கீம், சம்பந்தன், ஐ.தே.க அமைப்பாளர் தயா கமகே மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பளரடனும் பேசிக்கொண்டிருக்கின்ம்.. எந்த முதலமைச்சரை மக்கள் விரும்புகின்றார்களோ அவருக்கு நாம் ஆதரவளிப்போம். யார் முதலமைச்சர் என்பதை கட்சித் தலைவர்கள் கூடி 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவெடுப்போம். என்றார்.