Breaking
Mon. Dec 23rd, 2024

வில்பத்துவில் மீளக்குடிமர்த்தப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பினால் தம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் போலியானது என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

 அவ்வாறான குற்றச்சாட்டுகளால் தமக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு நட்டஈடாக 500 மில்லியன் ரூபாவை கோரியுள்ளார்.

 இதுதவிர, வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொதுபல சேனா கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 அமைச்சர் ரிஷாட் பதியூதீன் விகிதாசார அடிப்படையற்ற வகையில் மக்களை மீளக் குடியமர்த்தி வருவதாக பொதுபலசேனா அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குற்றம் சுமத்தியிருந்தது.

 வில்பத்து சரணாலயத்திற்கு வடக்காக மொல்லிக்குளம் பிரதேசத்தில் காடுகளை சுத்திகரித்து தற்போது 300 க்கும் அதிமான குடும்பங்கள் கூடாரங்களில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post