இ. அம்மார்
கடந்த ஒரு தசாப்ததிற்கும் மேலாக கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் திறன்படசெயற்பட்டு வந்த ஆங்கில மொழி மூலப் பிரிவை குரோதம், காழ்புணர்ச்சி, பிரதேச வெறியுணர்வைக் கொண்ட ஒரு சில ஆசிரியரின் சூழ்ச்சினால் தற்போது சீர்குழைக்கப்பட்டு பெற்றோரை குழப்ப நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இப்பாடசாலையின் வளர்ச்சியில் பொற்காலம் என வர்ணிக்கப்படுகின்ற அதிபர் திலகம் பஷPர் அவர்களால் இந்த ஆங்கில மொழி மூலக் கல்வி தோற்றி விக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை ஆங்கில மொழிப் பிரிவு மிகத் திறன்பட செயற்பட்டு வருகின்றது. எமது பகுதியைச் சேர்ந்த மக்கள் தொழில் நிமித்தம் காரணமாக இடம்பெயர்ந்து கொழும்பு ஏனைய பகுதிகளில் வசிக்கின்றவர்கள் கூட தங்களது பிள்ளைகளை இங்கே கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள்.
இந்த ஆங்கில மொழிக கல்வியை உடைப்பதன் மூலம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அதாவது தங்களது தனியார் வகுப்புக்களை பெரிதாக்கி தம் வசூலை அதிகரித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளுகின்ற சூழ்ச்சியின் ஓர் அங்கமாக இதனைப் பெற்றோர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இப்பாடசாலையில் ஆங்கில மொழிக் கல்வியின் தோற்றத்திற்குப் பிற்பாடு இப்பிராந்த்தியல் ஆங்கில மொழி மூலக் குறைபாட்டை நிவர்த்தி செய்யக் கூடியதாக இருந்தன. ஈகோ மனம் படைத்த சிலரின் வழிநடத்தல் காரணமாக இங்கு பிரிவினையைத் தோற்றுவித்து குழப்புகின்ற சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக சொற்ப காலங்களில் இருந்து விட்டு ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள அதிபர் அவர்கள் ஏனைய உயர் தரமிக்கப் பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலக் கற்கை நெறிகள் எவ்வாறு போதிக்கப்படுகின்றன என்பதை கொழும்பு ரோயல் கல்லூரி , கண்டி ரணவிரு ரோயல் முதல் ஆனந்த, நாலந்த, குருநாகல் மலியதேவ மற்றும் ஏனைய கவர்ச்சிகரமிக்கப் பாடசாலைகளை அகல ஆழமாக ஆராயந்து பார்த்தல் அவசியமாகும்.
வயிற்றெரிச்சல் மிக்க ஆசிரியர்களால் சூழ்ச்சியிலிருந்து இப்பாடசாலையை மீட்டெடுக்க சகல ஆங்கில மொழி மூல மாணவிகளுடைய பெற்றோர்களும் ஒன்றிணைந்துள்ளனர்.
இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் தெடாபாக ஒரு பிள்ளையைத் தாக்குதல் நடத்தியது தொடாபாக நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வாசிரியரே இதன் முதல் சூத்தரதாரி என இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் கூட்டிக் காட்டுகின்றனர்.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் முதல் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாக மேலும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.